நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்த பாலில் டீ குடித்திருக்கிறீர்களா? இனிமே இதை டிரை பண்ணி பாருங்க!

 தற்போதுள்ள காலகட்டத்தில், பலர் தங்களின் உடல் ஆரோக்கியத்தை பற்றி கவனமாக உள்ளனர். இதற்காக பலர் பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.

தற்போதுள்ள காலகட்டத்தில், பலர் தங்களின் உடல் ஆரோக்கியத்தை பற்றி கவனமாக உள்ளனர். இதற்காக பலர் பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.  அந்த வகையில், பலர் பாலை தவிர்க்க வேண்டும் என்று நினைப்பது உண்டு. ஆனால் பல ஆண்டுகளாக டீ குடித்து பழகியதால், டீ குடிக்காமல் இருக்கவே முடியாது.  ஆனால், இனி டீ குடிக்க பசும்பால் தேவை இல்லை. ஆம், தேங்காய் பால் மற்றும் தேநீர் போன்ற இந்த இரண்டு பொருட்களையும் இணைக்கும் போது, நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவுக்கு சூப்பர் பானம் கிடைக்கும்.

பொதுவாக தேங்காய் வளரும் வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் மக்களால் இந்த பானம் தயாரிக்கப்படுகிறது. தேங்காய்ப் பாலில் நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்து உள்ளன. மேலும், இதில் அதிக அளவு லாரிக் அமிலம், மெக்னீசியம், இரும்புச் சத்து, வைட்டமின் c, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் காணப்படுகிறன.  ஆயுர்வேத மருத்துவ முறையில் தேங்காய் பால் மிகவும் சத்தானதாக கருதப்படுகிறது. தேங்காய் பாலில் ஹைப்பர்லிபிடெமிக் சமநிலைப் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன.

இதன் காரணமாக இது சருமத்திற்கு மிகுந்த நன்மைகளைக் கொடுக்கும். தேங்காயை உணவில் சேர்த்துக் கொள்வது சருமத்தை மேம்படுத்துகிறது. இப்படிப்பட்ட தேங்காய் பாலில் டீ அருந்துவது உங்கள் சருமத்தை அற்புதமாக வைத்திருக்க உதவும்.  தேங்காய் நீரைப் போலவே, தேங்காய் பால் டீயும் உடல் எடையைக் குறைக்க உதவும். எடையை அதிகரிக்கச் செய்யும் கொழுப்புகளை அழிக்கும் பண்புகள் தேங்காயில் உள்ளன.

அதோடு, தேங்காயில் குறைந்த கலோரிகளும், அதிக நீர் உள்ளடக்கம் நிறைந்து உள்ளது. இதனால், இது உடல் எடையைக் குறைக்க உதவும் என்று கருதப்படுகிறது.  கொரோனா வைரஸைத் தவிர்க்க தேங்காய் தண்ணீரை குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். இதுகுறித்த ஆராய்ச்சியில், நீங்கள் தேங்காய் பால் டீயை அருந்தினாலும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேங்காயில் காணப்படும் வைட்டமின் c நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு ஊக்கத்தை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.  தேங்காயில் உள்ள எச்டிஎல் கொலஸ்ட்ரால், லாரிக் அமிலம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும் என்று ஆய்வு முடிவுகள் நிரூபிக்கின்றன.

தேங்காய் நீர் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துவதைப் போல, தேங்காய் பால் டீயும் வளர்சிதை மாற்றத்துக்கு நல்லது. அதுமட்டுமின்றி, செரிமானக் கோளாறுகள் மற்றும் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி ஆகியவற்றில் இருந்தும் விடுபட தேங்காய் பால் டீ வழிவகுக்கும்.  வீட்டில் தேங்காய் பால் டீ தயாரிப்பது என்பது மிகவும் எளிதானது. ஆனால் நீங்கள் எந்த வகையான டீயை தயாரிக்க விரும்புகிறீர்கள் என்பதை முதலில் நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சரி வாங்க இதனை தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேங்காய்ப் பால் கிரீன் டீ செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள்:

4 கப் தண்ணீர்

3 கிரீன் டீ பைகள்

கால் கப் தேங்காய் பால்

2 தேக்கரண்டி கிரீம் பால்

1 தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை

ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை கொதிக்க வைத்து விட்டு, மூன்று கிரீன் டீ பைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் 1/4 கப் தேங்காய் பால் மற்றும் 2 டீஸ்பூன் கிரீம் பாலை சேர்த்து நன்றாகக் குலுக்கி விட்டு, பின் கிரீன் டீ பையை அகற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமிருந்தால், நீங்கள் அதில் ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ளலாம்.


தேங்காய் பால் டீ அருந்துவதால் பல நன்மைகள் நமக்குக் கிடைத்தாலும், சில பக்க விளைவுகளையும் நமக்கு ஏற்படுத்தும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தேங்காய் பால் டீயை அதிகமாக அருந்துவதன் மூலம் கர்ப்பிணிகள் அல்லது பாலூட்டும் பெண்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படும். அதோடு, செரிமானப் பிரச்சனைகளும் ஏற்படும்.


ALSO READ : ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு கப் பால் செய்யும் அற்புதங்கள்..!!




Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!