நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் பப்பாளிக்காய் கூட்டு ...........

 உடல் எடை எப்போதும் அதிகரிக்காமல் இருக்க விரும்புபவர்களும் வாரம் ஒரு முறை பப்பாளிக்காயை கூட்டு அல்லது குழம்பில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எடை கட்டுக்குள் இருக்கும்.


தேவையான பொருட்கள் :

பப்பாளிக்காய் (சிறியது) - ஒன்று,

 தேங்காய் துருவல் - கால் கப், 

பச்சை மிளகாய்  - 2,

 சீரகம் - ஒரு டீஸ்பூன்,

 பாசிப்பருப்பு - ஒரு கப், 

கறிவேப்பிலை - சிறிதளவு, 

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,

 பெருங்காயத்தூள் - சிறிதளவு, 

எண்ணெய்  - 2 டீஸ்பூன், 

உப்பு - தேவையான அளவு.


செய்முறை:

பாசிப்பருப்பை தனியாக வேக வைக்கவும்.

 தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் நைசாக அரைத்து கொள்ளவும். பப்பாளிக்காயை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும்.

 அரைத்த தேங்காய் கலவையை வெந்த பப்பாளிக்காயுடன் சேர்த்து பருப்பும் சேர்க்கவும். 

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து பப்பாளி கலவையில் சேர்த்து கலந்து கொதிக்க வைத்து இறக்கவும். 

இப்போது சூப்பரான பப்பாளிக்காய் கூட்டு ரெடி.



ALSO READ : சளி, இருமலுக்கு தீர்வு தரும் வாழைத்தண்டு சாறு ........



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!