நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வயிற்றை சுத்தம் செய்ய இதை ட்ரை பன்னி பாருங்க.!

 வயிற்றைச் சுத்தம் செய்ய வீட்டில் உள்ள இந்த மூன்று பொருட்களே போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை முயற்சி செய்து பார்க்கலாம். 


  • வயிற்றை சுத்தம் செய்ய எளிய வழி
  • வீட்டில் உள்ள 3 பொருட்கள் போதும்
  • வயிறு மந்தம், பசியின்மைக்கு தீர்வு

வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி, பசியின்மை, தூக்கம் இன்மை, மந்தம் போன்ற பல்வேறு சிக்கல்கள் இருக்க நேரிடும். அவர்கள் கண்டிப்பாக வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும். இயற்கை முறையில் வீட்டில் உள்ளபொருட்களை வைத்தே வயிற்றை சுத்தம் செய்யலாம். அதாவது. காலை எழுந்தவுடன் ஒரு பாத்திரத்தில் மூன்று லிட்டர் தண்ணீர் கொதிக்க வைக்கவும். பிறகு நன்கு கொதித்த அந்த தண்ணீரில், மூன்று எலுமிச்சை பழங்களை பிழிந்து விடுங்கள்.

அதனுடன் மூன்று ஸ்பூன் கல்உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வெதுவெதுப்பாக வெறும் வயிற்றில் ஒரு அரை லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். தண்ணீர் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் கழிவறை செல்லத் தூண்டும். இல்லையெனில், பத்து நிமிடம் கழித்து, மேலும் சிறிதளவு தண்ணீரை அருந்தவும். ஐந்து நிமிடங்களில் கழிவறை செல்வது நிச்சயம். சென்று வந்துடன், மீண்டும் எலுமிச்சை உப்பு நீர் கலவையை எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவு அருந்துங்கள்.

சில நிமிடங்களில், மறுபடியும் மலம் கழியும். இதேபோல் நான்கு, ஐந்து முறை இந்த கலவையை முடிந்த அளவு அருந்தினால், அத்தனை முறையும் கழிவறை செல்வது நிச்சயம். நீர் அருந்துவதை நிறுத்தினால், மலம் கழிவது நின்றுவிடும். இந்த முறையில் வயிறு இயற்கையான முறையில் சுத்தம் செய்யப்படும். குடல் வலுப்பெறும். சாப்பிடும் உணவு உடம்பில் தங்கும். நன்கு செரிமானம் ஆகும்.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!