நித்தியானந்தா உண்மையில் எப்படிப்பட்டவர் தெரியுமா? பிரபல சேனல் வெளியிட்ட ஆவணப்படம்; உலகளவில் ட்ரெண்டிங்
- Get link
- X
- Other Apps
பாலியல் புகார் மற்றும் கடத்தல் பணமோசடி என பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு போலீசார் தேடி வரும் சுவாமி நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு அன்றாடம் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
அண்மையில், இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மோசமடைந்ததாகவும், பின்னர் உடல் நிலை தேறி மீண்டு வருவேன் எனகூறியதும் வைரலாகி வந்தது.
மேலும், நித்தி உடல் நிலை மோசமானதால் கோமாவுக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் சிகிச்சைக்காக இந்தியா திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.
பின், தான் நலமாக உள்ளதாகவும், கோமாவுக்கு செல்லவில்லை வதந்திகளை நம்பவேண்டாம் என இறுதியாக கூறியிருந்தார்.
நித்தியின் வாழ்க்கை படம்
இந்த நிலையில், நித்தியானந்தா குறித்த ஆவணப்படம் ஒன்றை பிரபல நிறுவனமான டிஸ்கவரி பிளஸ் வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் My Daughter Joined a Cult என்ற பெயரில் நித்யானந்தா குறித்த வெளியாகியுள்ளது.
மேலும், தமிழ், இந்தி, தெலுங்கு ,கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மூன்று பாகங்களாக வெளியாகியிருக்கும் இந்த ஆவணப்படத்தில் நித்தியானந்தாவின் கடந்த கால வாழ்க்கை, சாதாரண மனிதராக இருந்து எப்படி சாமியாராக உருவாகினார் என்பதை குறித்து விளக்கப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps


Comments
Post a Comment