மேகியை வைத்து அப்படி என்ன செய்திருப்பார்கள் என்று பார்த்தால், வைரலான புகைப்படத்தில் இருந்தது மேகி மில்க் ஷேக்.
உணவு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் பாஸ்ட் புட் வகைகள், சைனீஸ் வகைகள் என பல துரித உணவுகள் தற்போது மக்களின் மிகவும் விரும்பத்தக்க உணவாக இருக்கிறது. அப்படி பிரபலமானது தான் மேகி நூடுல்ஸ். இரண்டே நிமிடத்தில் சமைக்க கூடிய மேகி நூடுல்சுக்கு குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் அடிமை என்று தான் சொல்ல வேண்டும். மேகியை வைத்து வெஜ் மேகி, முட்டை மேகி, பன்னீர் மேகி, சிக்கன் மேகி, சீஸ் மேகி என பல விதங்களில் சமைக்க முடியும்.
இந்த உணவு தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் மிகவும் பேமஸ். மேகி நூடுல்ஸை வைத்து விதிவிதமாக சமைத்து சாப்பிடும் பழக்கம் அவர்களில் இருக்கிறது. இதுதொடர்பான பல வீடியோக்கள் கூட இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. அந்த வகையில் மேகி வைத்து தயார் செய்யப்பட்ட ஒரு வித்தியாசமான டிஷ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த உணவு மேகி பிரியர்களுக்கு பிடித்திருந்தாலும், பல நெட்டிசன்கள் அதை எப்படி சாப்பிடத் தோன்றுகிறது என பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேகியை வைத்து அப்படி என்ன செய்திருப்பார்கள் என்று பார்த்தால், வைரலான புகைப்படத்தில் இருந்தது மேகி மில்க் ஷேக். மில்க் ஷேக் மேல் சமைக்கப்பட்ட மேகி நூடுல்ஸ் இருந்ததை பார்ப்பதற்கு உண்மையில் நன்றாக இல்லை. இந்த படம் இப்போது ட்விட்டரில் பரவி வருகிறது மற்றும் யூசர்களின் மாறுபட்ட ரியாக்சன்களை குவித்து வருகிறது. செப்டம்பர் 11ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டதிலிருந்து, அந்த ட்வீட் கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கான லைக்குகளையும் ரியாக்ஷன்களையும் பெற்று வருகிறது. அதில் பலர் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தினாலும், அதன் ருசி எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள அதை சாப்பிட விரும்புவதாக தெரிவித்திருந்தனர். பிடிக்கும் என்பதற்காக இப்படியெல்லாமா யோசிப்பாங்க என்று பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மேகியை வைத்து வினோதமான டிஷ் தயாரிக்கப்பட்டது இது முதல் முறை என்றால், அது உண்மையில்லை. இதற்கு முன்பு ஆரஞ்சு மேகி என்ற ஒரு டிஷ் இணையத்தில் வைரலானது. அது ஒன்றுமில்லை சமைத்த மேகியில் ஆரஞ்சு சுளைகளை சேர்த்துவிடுகின்றனர். அதேபோல, பாணிபூரியில் உருளைக்கிழங்கு மசாலா வைப்பதற்கு பதிலாக, மேகி மசாலா வைத்து பரிமாறும் புகைப்படம் கூட இணையத்தில் வைரலானது.இவை, மிகவும் அருவறுக்கத்தக்க உணவு என்று பல நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். இதேபோல, கடந்த ஆண்டு ஜிலேபியை வைத்து வித்தியாசமாக செய்யப்பட்ட உணவு ஒன்று வைரலானது. ஜிலேபியை வைத்து மஞ்சூரியன் செய்த ஒரு நபர் அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். இனிப்பு மற்றும் காரம் கலந்த அந்த டிஷ் ட்விட்டரில் அதிக வெறுப்பையே சம்பாதித்து தந்தது.
Comments
Post a Comment