நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கட்டிப்பிடித்து முத்தம் தர அதென்ன கரடி பொம்மையா? பாம்பை கொஞ்சும் பெண் – வைரலாகும் வீடியோ

 அட அந்த முத்தம் கூட பரவாலங்க, அதுக்கு பாம்பு தர்ற ரியாக்‌ஷனை பாத்தா இன்னும் பயமா இருக்குது!


பாம்பு என்றால் படையும் நடங்கும். சிலர் பாம்பு என்று எழுதியிருந்தாலே 10 அடி தள்ளி நிற்பார்கள். ஆனால் எப்போதாவது பாம்பை செல்லப் பிராணியாக வளர்க்க விரும்பியதுண்டா? அப்படியே நீங்கள் வளர்த்தாலும் இந்த அம்மிணி போல பாம்புக்கு முத்தம் கொடுப்பீங்களா?

சரியா தான் படிச்சீங்க… ஷாக்க குறைங்க.. ராயல் பைத்தான்ஸ் என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியான வீடியோ ஒன்றில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய “செல்லப்பிராணி” பாம்பு ஒன்றை கொஞ்சுவதுடன் அதற்கு முத்தமும் கொடுத்துள்ளார். அதற்கு அந்த பாம்பு ஒரு ரியாக்‌ஷனும் கொடுத்துள்ளது;

பார்ப்பதற்கு நமக்கு தான் அய்யோ என்று இருக்கிறதே தவிர அந்த பெண்ணோ, ஐ லவ் மை ஸ்நேக் என்று பேசிக் கொண்டு அதனை கொஞ்சிக் கொண்டே இருக்கிறார். இந்த வீடியோவை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 


ALSO READ : இதுதாங்க சுத்தமான ஆறு; இந்தியாவுல தான் இருக்குது… யமுனைக்கு வந்த சோதனையப்பா இது!


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!