நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இனி கடவுளுக்கும் கட்டாயமா ஆதார் அட்டை? வைரலாகும் ஆதார் காளி

 மேற்கு வங்க மாநிலத்தில் கடவுள் காளி தேவிக்கு ஆதார் அட்டையின் பிரம்மாண்டமான வடிவம் சமூக ஊடகங்களில் வைரலானது. 


ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஆதார் அட்டை வைத்திருப்பது கட்டாயம் என்று கூறப்படுகிறது. அனைத்து அரசு வசதிகளையும் பயன்படுத்த UIDAI வழங்கும் ஆதார் அட்டை கட்டாயமாகும். அனைத்து குடிமக்களுக்கும் பயோமெட்ரிக் தனித்துவ அடையாள அட்டையான ஆதார் கார்டை வழங்குவதற்காக அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 

ஆனால் சில குடிமக்களிடம் சரியான ஆவணங்கள் இல்லாததால் ஆதார் அட்டை அனைவருக்கும் கிடைக்கவில்லை. இருந்தாலும், உரிய ஆவண சான்று இல்லாதவர்களும் ஆதார் கார்டு பெறுவதற்கான வழிமுறைகளை அரசு செய்துள்ளது.

ஆதார் அட்டை தேவையா இல்லையா என்ற வாத விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது.

ஆதார் அட்டையின் பயன்பாடு எங்கு தேவை, ஆதார் எண்ணை கட்டாயமாக கேட்கக்கூடாது என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆதார் அட்டை, விவாதங்களுக்கு ஆதாரமாகவும் இருக்கிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக கடவுள் காளி தேவிக்கு ஆதார் அட்டை கொடுக்கப்பட்டது சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.


காளிதேவிக்கு ஆதார் அட்டையை கொடுத்ததைத் தொடர்ந்து சாமிகளுக்கு ஆதார் அட்டை எடுப்பது கட்டாயமாக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. காளியின் கைரேகை மற்றும் கண் ரெட்டினா பதிவை எப்படி எடுத்தார்கள்? என்றும் மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்.

காளி தேவிக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டையின் மிகப் பெரிய சுவரொட்டியும் வைரலாகிறது. அந்த ஆதார் அட்டையில், காளி தேவியின் முகவரியாக 'கைலாய பர்வதம்'  குறிப்பிடப்பட்டுள்ளது. பின்கோடு 0000001 என்றும் இருக்கிறது.

ஜம்போ ஆதார் அட்டையில் “மா காளி” என்ற பெயர் உள்ளது, அதில் கணவரின் பெயர் “மகாதேவ்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, அன்னை காளியின் பிறந்தநாள் “01/01/4004” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சரி, கணவரின் முகவரியும், மனைவியும் முகவரியும் ஒன்றாகத் தானே இருக்கும்? சிவன் மற்றும் பார்வதியின் முழு முகவரி: “கைலாஷ் பர்பத், மேல் தளம், மானசரோவர் ஏரிக்கு அருகில், பின்கோடு 0000001”. ஆதார் பதிவு எண், ஆதார் எண் , QR குறியீடு என அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது சீனாவில் இருக்கும் கைலாசத்தை எப்படி இந்திய முகவரியாக குறிப்பிட முடியும்? 

சீனாவில் வசிப்பவர்களுக்கு ஆதார் அட்டை கொடுக்க சீன அதிகாரிகள் எப்போது சம்மதித்தார்கள்? என்றும் பலர் கேள்விகளை எழுப்புகின்றனர். அது சரி, இனி எல்லா சாமிகளுக்கு ஆதார் அட்டை எடுப்பது கட்டாயமாக்கப்படுமா? என்றும் சிலர் நையாண்டியாக கேட்கின்றனர்.


ALSO READ : ஸ்மார்ட்போன் இல்லாமல் WhatsApp பயன்படுத்துவது எப்படி தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!