நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இதுதாங்க சுத்தமான ஆறு; இந்தியாவுல தான் இருக்குது… யமுனைக்கு வந்த சோதனையப்பா இது!

 நெட்டிசன்கள் இந்த ஆற்றை புகழவும், யமுனாவை முறையாக பராமரிக்காத அரசை கண்டிக்கவும் இதில் காரணங்கள் ஒன்றும் இல்லாமல் இல்லை.


டெல்லி யமுனையில் தொடர்ந்து மாசுக்களால் நுரை பொங்கி சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் மேகாலயாவில் உள்ள ஆற்றின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில் உலகின் மிகவும் சுத்தமான நதிகளில் ஒன்று இந்தியாவில், மேகாலயாவின் ஷில்லாங்கில் இருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள உம்ங்கோட் நதி என்று குறிப்பிட்டிருந்தது. அனைத்து நதிகளும் இது போன்று தூய்மையாக இருக்க வேண்டும். இந்த நதியை தூய்மையாக வைத்திருக்கும் மேகாலயா மக்களிடம் தலை வணங்குகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சகம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் நதி மிகவும் சுத்தமாக உள்ளது. மேலும் நீருக்கு அடையே இருக்கும் கூழாங்கற்கள் கூட மிகவும் தெளிவாக தெரிகிறது. அதில் ஐந்து பேர் அமர்ந்து கொண்டிருக்க படகு ஒன்று அந்த ஆற்றில் பயணித்துச் செல்கிறது. இந்த புகைப்படத்தைக் கொண்டாட உண்மையிலேயே பல காரணங்கள் இருக்கின்றன. நெட்டிசன்கள் இந்த ஆற்றை புகழவும், யமுனாவை முறையாக பராமரிக்காத அரசை கண்டிக்கவும் இதில் காரணங்கள் ஒன்றும் இல்லாமல் இல்லை.



ALSO READ : பூமியில் தங்கம் தோன்றியது எப்படி? ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!