நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அட, இங்கிருந்த வழியக் காணோமே! தடுப்புச்சுவரில் ஏறி நடந்து செல்லும் யானை

 இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்ற அதே சூழலில் இது பல்வேறு விதமான கவலைகளையும் மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.


உலகம் முழுவதும் வன உயிரினங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றன. உலகம் வெப்பமயமாதல் மற்றும் மக்களின் செயல்முறைகளே பெரும்பாலான வனவிலங்குகளின் இன்னல்களுக்கு காரணம்.

இந்தியா முழுவதும் யானைகளின் வழித்தடத்தில், வாழிவிடத்தில் பல்வேறு மனித இடையூறுகள், குறிப்பாக ரெசார்ட்கள், வீடுகள். மேம்பாட்டு திட்டங்கள் என ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.

உங்களுக்கு தெரியுமா, ஆப்பிரிக்காவில் நாளுக்கு நள் தந்தத்திற்காக வேட்டையாடப்படும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற காரணத்தால் தந்தங்களற்ற யானைகளை பிரசவிக்கும் வகையில் பெண் யானைகள் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று.

இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்றில் யானை ஒன்று காட்டு வழியே நடந்து வந்து அங்கே இருக்கும் தடுப்புச்சுவரில் ஏறி மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடந்து செல்கிறது.

இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்ற அதே சூழலில் இது பல்வேறு விதமான கவலைகளையும் மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 


ALSO READ : இதுதாங்க சுத்தமான ஆறு; இந்தியாவுல தான் இருக்குது… யமுனைக்கு வந்த சோதனையப்பா இது!

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!