நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மரங்களுக்கு இடையே மனிதன் ஓடுகிறானா? நீங்க நல்லா ஏமாந்துட்டீங்க........

 சில குழப்பமான படங்கள்’ இந்த ஒளியியல் மாயைகளை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன.


ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை. illusion என்ற சொல் லத்தீன் வார்த்தையான illudere என்பதிலிருந்து வந்தது, அதாவது “கேலி செய்வது”.

சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இந்த ஒளியியல் மாயைகளை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன. சில நம் உணர்வை சோதிக்கின்றன.

அதிலும் விலங்குகளைப் பற்றிய ஆப்டிகல் இல்யூஷன் படம் நெட்டிசன்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி வருகிறது. இந்த படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும், உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாவும் தெரியக்கூடியவை.

அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது.

கீழே உள்ள படத்தை பாருங்கள்!


என்ன தெரிகிறது? மரங்களுக்கு இடையே மனிதன் ஓடுவது போல தெரிகிறதா? அப்படியானால் நீங்கள் நன்றாக ஏமாந்துவிட்டீர்கள். இப்போது மீண்டும் ஒருமுறை இந்த படத்தை உற்று பாருங்கள்..



இப்போது என்ன தெரிகிறது? கண்டிப்பாக இம்முறை நீங்கள் ஒரு குட்டி நாய், பனிப்புதருக்குள் இருந்து ஓடிவருவதை பார்த்திருப்பீர்கள்!

கிளார்க் ஏ டேவிட்சன் என்பவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் இந்த இல்யூஷன் படத்தை பகிர்ந்து, ஒரு மனிதன் காட்டுக்குள் ஓடுவதை தான் நான் பார்த்தேன். நான் மீண்டும் பார்க்கும் வரை. நீங்கள் அதை பார்க்கிறீர்களா? என்று கேட்டுள்ளார்.


ALSO READ : பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத பயனுள்ள பாத்திரங்கள்...

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!