நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடல் எடையை குறைக்க உதவும் ப்ளூ டீ...

பல வகையான டீ வகைகள் இருந்தாலும் அதில் நம் எல்லோருக்கும் ‘க்ரீன் டீ’ என்றால் நன்கு தெரியும் ஆனால் ‘ப்ளூ டீ’ தெரியுமா? வாங்க ப்ளு டீ எப்படி போடுவது என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

தற்போது டீ, காபி போன்றவற்றை குடிக்கும் பழக்கத்தையே நாம் மாற்றி கொண்டு வருகிறோம். உடல் எடையை சீராக வைத்து கொள்ள ‘க்ரீன் டீ’ பெரும் துணை புரிகின்றது. தினமும் காலையில் க்ரீன் டீ பருகுவதால் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் வெளியே தள்ளி உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்கும். இதை போலவே ப்ளூ டீயும் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைகிறது.... இதில் ஏராலமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன...

தேவையான பொருட்கள்

சங்கு பூ - சிறிதளவு

தேன் - 1டீஸ்பூன்

எலும்பிச்சை சாறு - 2 டீஸ்பூன்

செய்முறை

க்ரீன் டீ தயாரிப்பது போன்றே இந்த ப்ளூ டீ யும் தயாரிக்க வேண்டும். மிகவும் சுலபமாக தயாரித்து விடலாம். கொதிக்க வைத்த தண்ணீரில் சங்கு பூக்களை போட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து விட வேண்டும். அதில் எழுமிச்சை சாறு சில சொட்டுக்கள் விட்டு, தேவையான அளவு சுத்தமான தேன் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ செய்து பருகலாம்.

குறிப்பு : கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், நோயாளிகள் கட்டாயம் தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி இதனை எடுத்து கொள்ளக் கூடாது.
சங்கு பூ


மருத்துவ குணங்கள்

1. தலையின் மேற்பாகத்தில் அமைந்துள்ள நுண் துளைகளில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்டக் கூடியது இந்த ப்ளூ டீ. உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரலை பாதுகாக்கிறது. நீரிழிவு நோயாளிகளின் உடலில் சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவுவதாகவும் ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. 'புளூ டீயில்' இருக்கும் 'ஃப்ளேவனாய்ட்ஸ்' என்ற ரசாயனம் புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை அழிக்கிறதாம். அத்துடன், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுக்களிலிருந்தும் பாதுகாப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

3. கொழுப்பு நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிடும் பழக்கம் காரணமாக எடை அதிகமாக உள்ள வர்களுக்கு 'புரூ டீ ' (Butterfly Tea) பெரிதும் உதவியாக இருக்கிறது. தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் அதற்கு உண்டு.

4. வேலைப்பளுவின் காரணமாக உரிய நேரத்திற்குச் சரியாக சாப்பிட முடியாமல் இருப்பவர்களுக்கு நாளடைவில் குடற்புண் பாதிப்பு ஏற்பட்டு விடலாம். அவர்களுக்கு பயன் அளிக்கக்கூடிய பானமாக 'புளூ டீ உள்ளது.

5. மேலும் இந்த வகை டீ அஜீரணத்தை குணமாக்குவதுடன். வயிற்றில் உண்டாகும் எரிச்சலையும் தடுக்கிறது.

6. அதுமட்டுமல்லாமல் உடலின் வெப்ப நிலையைச் சீராக வைத்துக் கொள்ளவும் துணை புரிகிறது. உடல் வெப்பம் சீரற்ற நிலையில் இருப்பவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் சுறுசுறுப்பாக செய்ய இயலாது. குறிப்பாக, புளூ டீ அருந்துவதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமானது, மன அழுத்தத்தை தவிர்க்க உதவுவதாகும்.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!