நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரு சின்ன ஜோக் 'விவாகரத்துக்கு' காரணம் ஆனது..!!

 ஒரு நகைச்சுவை விவாகரத்து ஏற்படக் காரணமாக இருக்குமா என ஆச்சரியமாக உள்ளதா.. ஆனால், அது தான் உண்மை. 

எதற்கும் ஒரு எல்லை உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால் அதைக் கடக்கும்போது அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம். அதனால்தான் எப்போதும் ஜோக் இன் தி லிமிட் என்று சொல்லப்படுகிறது. பிரிட்டனில் கணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு தனது மனைவியைப் பற்றி கேலி செய்த சம்பவம் ஒரு விவாகரத்திற்கு காரணமானது. மனைவிக்கு அந்த  சமப்வம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அப்படி என்ன தான் கணவர் சொன்னார் என யோசிக்கிறீர்களா..! 

விவாகரத்திற்கு காரணமான நகைச்சுவை

கணவர் தனது நண்பர்களுக்கு அனுப்பிய ஒரு செய்தியில் 'பார்ட்னர்ஸ் டிபார்ட்மென்ட்டை புதுப்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது' ('time has come to update the partner's department') என்று எழுதப்பட்டிருந்ததாக ‘தி சன்’ என்னும் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது . இந்தச் செய்தியைப் படித்து ஆத்திரமடைந்த மனைவி, விவாகரத்து கோரினார்.

திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவு

எனக்கு 43 வயது என்றும், எனது மனைவிக்கு 41 வயது என்றும் அந்த நபர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். எங்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது, 12 மற்றும் 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நாங்கள் எங்கள் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் மற்ற தம்பதிகளை போலவே எங்களுக்கு இடையிலும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என குறிப்பிட்டிருந்தார்.

சமூக ஊடக நண்பர்கள்

இது குறித்து குறிப்பிட்ட நபர் தனது பள்ளிக்காலத்தின் இரண்டு பெண் தோழிகளுடன் நகைச்சுவையாக பகிர்ந்திருந்தார். சமூக ஊடகங்கள்  மூலம் இந்த பழைய நண்பர்களைக் கண்டுபிடித்து அவர்களிடம் கேலியும் கிண்டலுமாக கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் மெசேஜ்கள் சாதாரணமாக அனுப்பப்பட்ட நிலையில், பின்னர் அவை எல்லை மீறிச் சென்றன. 

வரம்பு மீறிய சேட் பரிமாற்றம்

தனது பள்ளிக் கால தோழிகளுடன் அவர் மெஸ்சேஜ்களை பரிமாறிக் கொண்ட சமயத்தில், உன் பாதங்கள் முன்பு போல் கவர்ச்சியாக இருக்கிறதா?  என கேட்டதற்கு, அந்த பெண் தோழி, தனது கால்களின் படத்தை அனுப்பினார். அதோடு,  உனக்கு மசாஜ் செய்ய விரும்புவதாகவும் பெண் தோழி  பதலைத்துள்ளார்.  பதிலுக்கு, இந்த நபர் என் உடல் இன்னும் கவர்ச்சியாக இருக்கிறது, ஆனால் என் மனைவி அதை பாராட்டுவதேயில்லை  என்று எழுதியுள்ளார்.  இப்படி நீண்ட சேட் அவருக்கு மிகவும் பிரச்சனையை ஏற்படுத்தி விட்டது. 

மனம் பாதிக்கப்பட்ட மனைவி

எனது சேட் தகவல்களை படித்த பிறகு,  தனது மனைவி மிகவும் கோபம் அடைந்ததாக அந்த மனிதர் கூறினார். இது வழக்கமான கேலிப்பேச்சு,  எனது மனைவி இதை ஒரு நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளாமல் தீவிரமாக எடுத்துக் கொண்டார் என அந்த நபர் கூறியுள்ளார். 

சந்தேகிக்க ஆரம்பித்த மனைவி 

இந்த சம்பவத்தின் பின்னர் தனது மனைவி மிகவும் சந்தேகமடைந்ததாகவும், அவர் தனது தொலைபேசியை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அந்த நபர் தெரிவித்தார். அப்பொழுது 'பார்ட்னர்ஸ் டிபார்ட்மென்ட்டை மேம்படுத்த வேண்டிய நேரம் இது' ('time has come to update the partner's department') என்று எனது நண்பருக்கு மெசேஜ் அனுப்பினேன். ஆனால்,  ​​இந்தச் செய்தியை நீக்க மறந்துவிட்டேன். அதையும் என் மனைவி அதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளாமல், சீரியஸாக எடுத்துக் கொண்டு, இப்போது அவள் விவாகரத்து செய்ய வலியுறுத்துகிறாள். கணவனுக்கு தன் மீது மரியாதை இல்லை என்று மனைவி நினைக்கிறாள்.

நிபுணர்கள் கூறுவது என்ன!

நிச்சயமாக நீங்கள் யாருடனும் உடல் ரீதியாக தொடர்பில் இல்லை என்றாலும், மனதளவில் நெருக்கமாக பழகுவதும் ஒரு வகையான ஏமாற்று வேலை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உங்கள் பெண் நண்பரிடம் உங்கள் மனைவியைப் பற்றி  பேசியிருக்க கூடாது. அதை சாதாரண ஜோக என கூற தப்பிக்க முடியாது என்கின்றனர். 



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!