நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஜப்பான் பெண்களின் ஷைனிங் முகத்திற்கு காரணம் இது தானா? உடனே ட்ரை பண்ணி பாருங்க

 ஒயின் எடுத்து கொள்வதால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இவற்றை பல பழங்களில் இருந்து தயாரிக்கலாம். இதனை குடிப்பதால் தோலின் ஆரோக்கியம் மேம்படும். தினம் ஒயின் குடிப்பதாலும் ஒயின் பேஷியல் செய்வதாலும் தோலிற்கு பல பலன்கள் கிடைக்கும்.


ஜப்பான் பெண்களின் தினமும் 1 டம்ளர் ஒயின் குடிப்பார்கள். இது தான் அவர்களின் அழகின் ரகசியமாக கருதப்படுகின்றது. மேலும், ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..


நன்மைகள்:-

முகப்பரு வருவதற்கு சில குறிப்பிட்ட பாக்டீரியாக்கள் தான் கரணம். ஒயின் எடுத்து கொள்வதால் இந்த பாக்டீரியாக்கள் வளர்ச்சியை குறைக்கும். தோலில் சுருக்கம் விழாமல் இருக்கும். மேலும் இதில் உள்ள பண்புகள் தோலை பளபளப்பாக வைக்க உதவும். இது UV கதிர்களால் தோலில் ஏற்படும் மாற்றங்கள் வராமல் தடுக்கும்.

வெயிலில் நீண்ட நேரம் இருப்பதால் தோலில் நிறம் மாறுபடும். வெயிலினால் தோலினால் நிறம் கறுப்பாகவோ அல்லது அடர் நிறமாகவோ இருந்தால் ஒயின் பேஷியல் செய்வது உதவியாக இருக்கும். தினம் ஒயின் எடுத்து கொண்டாலும் தோலின் நிறத்தை பாதுகாக்கலாம்.

தோலை நாள் முழுவதும் புத்துணர்வுடனும், ஈரப்பதத்துடன் வைக்கவும், தோலை பார்ப்பதற்கே பளபளப்பாக வைக்கும். ஒயினில் பேஷியல் செய்யவும், முகத்தை கழுவுவதற்கு, ஒரு காட்டனில் ஒயினை நனைத்து முகத்தை துடைப்பதும்,தோலில் சுருக்கம் விழாமல் இருக்கும்.


தோல் மட்டும் இல்லாமல் உடல் முழுவதற்கும் இந்த ரெட் ஒயின் பல ஆரோக்கியமான நன்மைகளை தருகிறது. ஒயின் குடிப்பதால் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும் இரத்த அழுத்தம் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு, நீரழிவு நோய் வராமல் தடுக்கிறது. 



ALSO READ : சருமத்தின் நிறத்தை அதிகரிக்க மஞ்சள்! எப்படி பயன்படுத்தலாம்?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!