நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காய்ச்சாத பாலை குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்...

 பாலில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் இருக்கிறது என தெரிந்தாலும், அவற்றை காய்ச்சாமல் குடிக்கலாமா? என்ற சந்தேகம் இருக்கிறது. 


  • காய்ச்சாத பாலில் இருக்கும் நன்மைகள்
  • தினமும் காய்ச்சாத பாலை குடிக்கலாமா?

பாலை காய்ச்சிக் குடிக்கலாமா? காய்ச்சாமல் குடித்தால்? என்ன பிரச்சனை என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. பால் ஒரு ஆரோக்கியமான ஊட்டச்சத்தான உணவு. இதனை காய்ச்சிக் குடித்தாலும், காய்ச்சாமல் குடித்தாலும் அதற்கேற்ற பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். காய்ச்சாமல் குடித்தால் கூட என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கே தெரிந்து கொள்வோம்.  

காய்ச்சாத ஒரு கப் பாலில் 149 கலோரிகள், 8 கிராம் புரோட்டீன்கள், 8 கிராம் கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் 12 கிராம் இருக்கிறது. நார்ச்சத்து இல்லை. சர்க்கரை 12 கிராம் இருக்கிறது. இதுதவிர கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் காணப்படுகிறது. காய்ச்சாத பாலை குடிக்கும் போது, இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இதில் இருக்கும் பொட்டாசியம் குறைந்த இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. ரத்த அழுத்தம் பிரச்சினை இருப்பவர்கள் காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மாகுலர் சிதைவில் இருந்து காப்பாற்ற உதவுகிறது.

எல்லா வயதினருக்கும் எலும்பை பராமரிக்க கால்சியம் தேவை. எனவே எலும்பு ஆரோக்கியத்தை பெற காய்ச்சாத பாலை தாரளமாக குடிக்கலாம். குழந்தை பருவ ஆஸ்துமா, அரிக்கும் தோலழற்சி மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களும் காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ளலாம்.  பாலில் உள்ள லாக்டோஃபெரின், இம்யூனோகுளோபுலின், லைசோசைம், லாக்டோபெராக்ஸிடேஸ், பாக்டீரியோசின்கள், ஒலிகோசாக்கரைடுகள் மற்றும் சாந்தின் ஆக்சிடேஸ் போன்ற ஆன்டி மைக்ரோபியல் உயிரிகள் காணப்படுகிறது. இவை தீங்கு விளைவிக்கும் கெட்ட பாக்டீரியாக்களை கட்டுப்படுத்த உதவுகிறது.





Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!