நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரு வாரம் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி ஜூஸ் குடிங்க! இந்த நன்மைகள் உங்களை வந்து சேரும்....

 நாம் தினமும் சமையலறையில் பயன்படுத்தும் ஓர் மருத்துவ குணம் நிறைந்த பொருள் தான் இஞ்சி.

இந்த இஞ்சி பல ஆண்டுகளாக இயற்கை வைத்தியத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற பல ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது.

அதிலும் இதன் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஜூஸ் தயாரிப்பது எப்படி? 

மிக்சர் ஜாரில் இஞ்சி துண்டுகளை போட்டு அரைத்து, அதை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாறு, சுவைக்கேற்ப தேன் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்தால், இஞ்சி ஜூஸ் தயார். 

நன்மைகள்

கர்ப்பிணிப் பெண்கள் காலையில் குமட்டல் உணர்வை அதிகம் சந்திப்பவராயின், இந்த இஞ்சி ஜூஸைக் குடிக்கலாம். இது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது மற்றும் பாதுகாப்பானதும் கூட.


உங்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக வயிற்று வலி ஏற்படுமானால், இந்த இஞ்சி ஜூஸை தினமும் குடியுங்கள்.


 ஆர்த்ரிடிஸ் நோயாளிகள் சந்திக்கும் கடுமையான மூட்டு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் அடிக்கடி தலைவலியை சந்திப்பவர்களுக்கும் இந்த இஞ்சி ஜூஸ் நல்லது.


 தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடியுங்கள். இது உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். 


தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி ஜூஸை குடித்து வந்தால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, உடலின் மெட்டபாலிசமும் மேம்படும்.


 சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி ஜூஸை குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.



ALSO READ : உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதுகாக்கும் ஒரே ஒரு பழம்! பலருக்கும் தெரியாத ரகசியம்....

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!