நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்கள் உதடுகள் சுருங்கி பொலிவிழந்து காணப்படுகிறதா? எப்படி சரி செய்யலாம்?

 பொதுவாக முகத்தில் கண்களுக்கு அடுத்தபடியாக பலராலும் கவனிக்கப்படக்கூடிய பகுதி உதடுகள்.

வறண்ட, கருமையான உதடுகள் ஒட்டுமொத்த முகப்பொலிவையே குறைக்கும் விதமாக அமையலாம்.

எனவே உதடுகளை பராமரிப்பதும் முக்கியமானது. எனவே இவற்றை எளியமுறையில் போக்கலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம். 

  • சில துளிகள் எலுமிச்சை சாறுடன், ஒரு டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து லிப் ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம். இந்த கலவையை நன்றாக உதட்டின் மீது தெய்த்து ஸ்க்ரப் செய்த பிறகு, உங்கள் உதடுகளை வட்ட இயக்கத்தில் சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். அதன் பின்னர் வெது வெதுப்பான நீரைக் கொண்டு உதடுகளை சுத்தப்படுத்தலாம்.

  •  தினமும் உதடுகள் மீது தேனை தடவலாம். மேலும் சர்க்கரையுடன் தேன் கலந்த கலவையை உதடுகள் மீது தேய்த்து சுத்தப்படுத்தலாம்.

  • கற்றாழை ஜெல்லை லிப் மாஸ்க்காக பயன்படுத்தலாம் அல்லது மஞ்சள் தூளுடன் சேர்த்து பேஸ்ட் செய்தும் பயன்படுத்தலாம். இந்த கலவையை உங்கள் உதடுகளில் தடவி, 10 நிமிடங்கள் காயவிடவும். அதன் பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இதை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.

  • வாஸ்லின் போன்ற பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகள் மீது தடவி, அதன் மீது மென்மையான டூத் பிரஷைக் கொண்டு அழுத்தி தேய்க்கவும். சுமார் 5 நிமிடத்திற்கு மேலிருந்து கீழாக வட்ட வடிவில் இதனை செய்யும். இப்போது, ​​உங்கள் உதடுகளை வெதுவெதுப்பான நீரில் கழுவி, பெட்ரோலியம் ஜெல்லியை மீண்டும் தடவவும். இந்த செயல்முறை உதடுகளில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.

  •  பாதாம் எண்ணெயில் ஸ்க்லரோசண்ட் மற்றும் மென்மையாக்கும் பண்புகள் உள்ளன, அவை இறந்த சரும செல்களை அகற்ற உதவுகின்றன. இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களில் அதிகமாக உள்ளது, இது மென்மையான மற்றும் மிருதுவான உதடுகளுக்கு சிறந்தது.




Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!