நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பளபளப்பான தலைமுடி வேண்டுமா? இந்த அற்புத எண்ணெய்யை ஒரு வாரம் பயன்படுத்தி பாருங்க!

 பொதுவாக கூந்தல் பளபளப்பாக, நீளமாக, மற்றும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நாம் அனைவருமே ஆசைப்படுகிறோம் . 

இருப்பினும் நம்மில் பலருக்கு கூந்தல் அப்படி இருப்பதனால் இதற்காக பலர் விலையுயர்ந்த கூந்தல் பராமரிப்புப் பொருட்களை மட்டுமே சார்ந்து இருக்கின்றனர். 

 இருந்தாலும் இது தற்காலிகமான தீர்வினை தான் தரும். ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு இயற்கை எண்ணெய் பல உதவுகின்றது.

தற்போது அதில் எளியமுறையில் வீட்டிலே செய்யக்கூடிய எண்ணெய் ஒன்றை இங்கே பார்ப்போம். 

தேவையானவை 


  •  செம்பருத்தி இலைகள் - ½ கப்
  • செம்பருத்தி பூக்கள்    - 2
  • தேங்காய் எண்ணெய்  -  ¼ கப்
  •  பாதாம் எண்ணெய் -  ¼ கப்

செய்முறை 

½ கப் செம்பருத்தி இலைகள் மற்றும் 2 செம்பருத்தி பூக்களை எடுத்துக் கொள்ளவும். குளிர்ந்த நீரில் கழுவவும், வெயிலில் உலர வைக்கவும்.  

அடுப்பில் இரும்பு கடாய் வைத்து, அதில் ¼ கப் ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் மற்றும் ¼ கப் பாதாம் எண்ணெய் சேர்க்கவும். உலர்ந்த செம்பருத்தி இதழ்கள் மற்றும் இலைகளைச் சேர்த்து கலவையை சூடாக்கத் தொடங்குங்கள்.

குறைந்த தீயில் 5 நிமிடங்கள் சூடாக்கி, குளிர்விக்க அனுமதிக்கவும்.

குளிர்ந்த எண்ணெயை வடிகட்டி, பாட்டிலில் ஊற்றி, குளிர்ந்த இடத்தில் 1 வாரத்திற்கு சேமிக்கவும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் எண்ணெயை சிறிது சூடாக்கவும்.

இந்த ஹேர் ஆயிலை, சேதமடைந்த முடி, சீக்கிரம் நரைத்தல் மற்றும் முடி உதிர்தல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் பயன்படுத்தலாம்.

இது முடி வளர்ச்சியைத் தூண்டவும், உச்சந்தலையை குளிர்விக்கவும், உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும் கருமையாகவும் மாற்ற உதவுகிறது.   



ALSO READ : உங்கள் உதடுகள் சுருங்கி பொலிவிழந்து காணப்படுகிறதா? எப்படி சரி செய்யலாம்?

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!