நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

10 நிமிடத்தில் ரெடியாகும் இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார்: ஒருமுறை இதை ட்ரை பண்ணுங்க!

 இட்லிக்கு விரைவில் சாம்பார் செய்துவிட வேண்டும் என்று நாம் நினைப்போம் ஆனால் பெரும்பான்மையான நேரங்களில் சாம்பார் செய்வது கடினமாக இருக்கும். இந்நிலையில் இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.


இட்லிக்கு விரைவில் சாம்பார் செய்துவிட வேண்டும் என்று நாம் நினைப்போம் ஆனால் பெரும்பான்மையான நேரங்களில் சாம்பார் செய்வது கடினமாக இருக்கும். இந்நிலையில் இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.

செய்முறை :

1/2 கப் அளவு துவரம் பருப்பை 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஊற வைத்த துவரம் பருப்பு – 1/2 கப், நறுக்கிய மஞ்சள் பூசணிக்காய் – 1 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, பச்சை மிளகாய் – 2, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு, சாம்பாருக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி மூன்று விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பருப்பும் காயும் நன்றாக வெந்து வந்தவுடன் லேசாக மசித்து கொள்ளுங்கள். குக்கரில் வெந்த பருப்பு காய் அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக சிறிய தாளிப்பு கரண்டியில் வர மல்லி – 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 4, இந்த இரண்டு பொருட்களையும் போட்டு மணக்க மணக்க வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு, அந்த சூட்டிலேயே சீரகம் – 1/2 ஸ்பூன், போட்டு இந்த மூன்று பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த இந்த பொடியை அப்படியே குக்கரில் இருக்கும் சாம்பாரில் போட்டு விடுங்கள். சாம்பாரை அடுப்பில் வையுங்கள் லேசாக கொதிக்கட்டும். கரண்டியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு – 1/2 ஸ்பூன், வர மிளகாய் – 1, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10 பல், கருவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 1/4 ஸ்பூன் போட்டு தாளித்து அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரில் கொட்டி 5 நிமிடம் போல கொதிக்க விட்டால் சாம்பார் ரெடி.




Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!