நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இன்பாக்ஸில் வந்துகுவியும் விளம்பர மெயில்கள்… இனி இதைப் பயன்படுத்தி தடுத்திடுங்கள்!

 ஜிமெயில் இன்பாக்ஸில் அதிக விளம்பர மெயில்கள் நமக்கு எரிச்சலைத் தரும். முக்கியமான மெயிலைத் தேடுவது கூட கடினமாக இருக்கும். இதற்கு எளிய தீர்வாக ‘ஜிமெயில் பில்டர்’ (Gmail filter) என்ற வசதி உள்ளது. இதைப் பயன்படுத்தி தேவையற்ற மெயில்கள் வருவதை தடுத்திடலாம்.


ஜிமெயில் அதிகம் பயன்படுத்துபவர்கள் நிச்சயம் இந்த பிரச்சனையை எதிர்கொண்டிருப்பர். அதிக விளம்பர மெயில்கள் வந்து குவிந்திருக்கும். நமக்கு வேண்டிய முக்கியமான மெயிலைத் தேடுவது கூட கடினமாக இருக்கும். ஒரு கட்டத்தில் எரித்தலை ஏற்படுத்தும். நாம் எல்லாவற்றிருக்கும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம். ஒரு ஆப் டவுன்லோட் செய்யும்போது கூட ஜிமெயில் மூலம் தான் லாக்கின் செய்கிறோம். ஷாப்பிங் செய்யும் போதும் கூட துணிகடை, உணவகம் என எல்லாவற்றிருக்கும் ஜிமெயிலை கொடுக்கிறோம். அதனால் ஏராளமான விளம்பரங்கள் ஜிமெயிலில் வந்து குவிகின்றன. இதை தடுப்பதற்கு சில வழிகள் உள்ளன.

ஜிமெயில் பில்டர் என்றால் என்ன?

ஜிமெயில் பில்டர் வசதியைப் பயன்படுத்தி ஆட்டோமெடிக்காக மெயில்களை முறைப்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு ஐடியிலிருந்து மெயில் தொடர்ச்சியாக வருகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்றால், நீங்கள் ஜிமெயில் பில்டர் வசதியைப் பயன்படுத்தி, அந்த மெயிலை archive அல்லது delete டெலிட் செய்து கொள்ளலாம்.


ஜிமெயில் பில்டர் வசதியை பயன்படுத்துவது எப்படி?

பல்வேறு வழிகளில் ஜிமெயில் பில்டர் வசதியை பயன்படுத்தலாம். search box பயன்படுத்தி ஜிமெயில் பில்டர் வசதியை பயன்படுத்துவது எளிதாக இருக்கும்.

1.முதலில் ஜிமெயில் அக்கவுண்ட் லாகின் செய்ய வேண்டும்

2. பின், search bar-இல் ‘Show Search Options’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

3. நீங்கள் தவிர்க்க வேண்டிய ஐடியை குறிப்பிட வேண்டும். ஓரிரு வார்த்தைகளில் குறிப்பிடலாம்.

4. பின் அதில் வரும் தகவல்களில் வேண்டியவற்றை கொடுத்து, Create filter கொடுக்கலாம்.




மற்றொரு வழி

வேறு முறையிலும் இந்த வசதியை பயன்படுத்தலாம். அதற்கு செட்டிங்ஸ் மெனுவிற்கு செல்ல வேண்டும்.
வலப்புறத்தில் உள்ள gear ஐகான கிளிக் செய்ய வேண்டும். பின், செட்டிங்ஸ் ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும். பின், “Filters and Blocked Addresses” கிளிக் செய்து, “Create a new filter” கொடுக்கலாம்.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!