நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எலக்டிரிக் ஸ்கூட்டர் VS பெட்ரோல் ஸ்கூட்டர் - எது சிறந்தது?

 எலக்டிரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா? பெட்ரோல் ஸ்கூட்டர் வாங்கலாமா? என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு, இங்கிருக்கும் டிப்ஸ் உபயோகமாக இருக்கும்.


ண்டின் தொடக்கத்தில் இருக்கும் பலரும் பெட்ரோல் ஸ்கூட்டர் வாங்கலாமா? அல்லது எலக்டிரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா? என்ற குழப்பத்தில் உள்ளனர். விலை, தரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் சந்தேகம் எழுப்பும் அவர்கள், பெட்ரோல் வாகனங்களுக்கு இன்னும் எவ்வளவு நாள் மவுசு இருக்கும்? எலக்டிரிக் வாகனம் வாங்கினால் அதன் உதிரிபாகங்கள் எல்லா இடத்திலும் கிடைக்குமா? மெயின்டனனஸ் எப்படி? இருக்கும் என்ற கேள்விகள் பொதுவாக இருக்கின்றன.

அப்படியான குழப்பத்தில் இருக்கும் உங்களுக்கு இரண்டு வாகனங்களிலும் இருக்கும் 2 மிக முக்கியமான சாதக பாதகங்களை பட்டியலிடுகிறோம். இதனடிப்படையில் எந்த வாகனத்தை வாங்கலாம் என முடிவெடுத்துக் கொள்ளுங்கள். 

1. விலை: 

பொதுவாக பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலை அதிகம். ஆனால் தற்போது மானியம் காரணமாக எலக்டிரிக் ஸ்கூட்டர்களின் விலை குறைந்துள்ளது. பல அரசாங்கங்கள் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குகின்றன. பெட்ரோல் டீசல் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டும், சுற்றுச்ச்சூழல் பாதிப்பு அடிப்படையிலும் எல்டிரிக் ஸ்கூட்டர்களின் உற்பத்தியை அரசாங்கங்கள் ஊக்குவித்து வருகின்றன. இதனால், அந்த வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும் நிலையில், பெட்ரோல் வாகனங்களுக்கு அத்தகைய மானியங்கள் ஏதும் வழங்கப்படவில்லை. அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு எலக்டிரிக் வாகனங்களை வாங்குவதை பரிசீலிக்கலாம். 

2. பராமரிப்பு: 

பெட்ரோல் வாகனங்களைக் காட்டிலும் எலக்டிரிக் வாகனங்களில் உபகரணங்கள் பழுது மிக குறைவு. மேலும், அந்த வாகனத்தின் பராமரிப்பு செலவும் பெட்ரோல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது குறைவாக இருக்கும். ஆனால், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பெட்ரோல் வாகனங்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம். எலக்டிரிக் ஸ்கூட்டர்களில் இருக்கும் பேட்டரியை கட்டாயம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியாக வேண்டும். புதிய பேட்டரியை பொருத்திக் கொள்ளலாம் என்றாலும், அவற்றின் விலை மிகவும் காஸ்டிலியாக இருக்க வாய்ப்புள்ளது.


ALSO READ : 7 வயது மாணவருக்கு பதிலாக பள்ளிக்கு செல்லும் ரோபோ!

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!