நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் சீக்கிரம் வயதாகும்.. சர்வதேச ஆய்வில் அதிர்ச்சி தகவல்.....

 Frontiers in Aging : ஸ்மார்போன் போன்ற கேஜட்டுகளை அதிகம் பயன்படுத்துவதால் செல்களில் பாதிப்பு ஏற்பட்டு சீக்கிரம் வயதாகும் என்ற புதிய தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.


இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. தினசரி நாம் நேரத்தை அதிகமாக செலவிடுவது அவர்களின் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூடரில் தான் என்றால் அது மிகையாகாது. விர்சுவல் உலகில் தான் இன்றைய தலைமுறை தனது வாழ்வின் பெரும்பாலான நேரத்தை கழிக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்த பழக்கமானது பல்வேறு பின்விளைவுகளையும் மக்களிடம் உருவாக்குகிறது.

அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் போன்ற கேட்ஜெட்களை அதிகம் பயன்படுத்துவதால் உடல்நலக்கேடுகள் ஏற்படுவது குறித்து புதிய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நீண்ட நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால் சீக்கிரம் வயதாகி மூப்பை அடைவோம் என ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'Frontiers in Aging' என்ற நாளேட்டில் இந்த ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜட்விகா கீபுலுட்டோவிக் இந்த அறிக்கையில் முக்கிய பங்களிப்பு ஆற்றியுள்ளார். இந்த தகவல் குறித்து அவர் கூறுகையில், டிவி, லேப்டாப், செல்போன்கள் போன்றவற்றில் இருந்து அதீத அளவில் நீள நிற வெளிச்சம் நம் மீது விழுகிறது.

இது நமது உடலில் பல்வேறு செல்களில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சருமம், கொழுப்பு செல்கள் தொடங்கி சென்சரி நியூரான் வரை இதன் மூலம் பாதிப்பு ஏற்படுகிறது. இதை பழப் பூச்சிகளிடம் வைத்து ஆய்வு மேற்கொண்டோம். இந்த பூச்சிகளிடம் நீள வெளிச்சத்தை பாய்ச்சிய போது, இந்த பூச்சிகளின் செல்களில் மாற்றம் ஏற்பட்டு அவற்றின் செயல்பாடுகள் பாதிப்பை கண்டுள்ளன.

அதேவேளை, இந்த வெளிச்சத்தில் வைக்காத பூச்சிகள், வெளிச்சத்தில் வைக்கப்பட்ட பூச்சிகளை விட நீண்டகாலம் உயிர் வாழ்கின்றன. முதன் முதலாக ஆய்வில் இது தெரியவந்துள்ளது. பூச்சிகளின் செல்களில் நீள நிற வெளிச்சம் படுவதால் அதன் செல்களில் பாதிப்பு ஏற்படுவதே சீக்கிரம் மூப்படைவதற்கு காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.



ALSO READ : உடலை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவும் உணவுகள்!

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!