நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பலாச்சுளைகளை சாப்பிட்டு வந்தால் ஏற்படும் அற்புதங்கள்! இதயநோய் சரியாகும்.. புற்றுநோயை தடுக்கும்

பலாப்பழம் சுவையானது மட்டுமல்ல! ஆரோக்கியமானதும் கூட!

சில பலாச்சுளைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் பல அற்புதங்கள் ஏற்படும். 

இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும்

சாதாரணமாக பார்த்தால் இதிலுள்ள சர்க்கரையால் இதை டயாபெட்டீஸ் நோயாளிகள் சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால் அதே நேரத்தில் இதிலுள்ள மாங்கனீஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. 

சரும ஆரோக்கியம்

பலாப்பழம் நமக்கு ஆரோக்கியமான அழகான பொலிவு நிறைந்த சருமத்தை கொடுக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமம் வயதாகுவதற்கு எதிராக செயல்படுகிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்கள், பொலிவின்மை போன்றவற்றை போக்கி ஆரோக்கியமான சருமத்தை தருகிறது. சரும சுருக்கங்களை போக்க இந்த பலாப்பழத்தை குளிர்ந்த பாலில் ஊற வைத்து பேஸ்ட் மாதிரி அரைத்து தினமும் முகத்தில் தடவி ஒரு 6 வாரத்திற்கு செய்யும் போது சுருக்கங்கள் மறைந்துவிடும்.

இரத்த அழுத்தம்

பலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் செல்களின் எலக்ரோலைட் பொருட்களான சோடியத்தின் அளவை சமம்படுத்துகிறது. இதனால் உடலின் இரத்த அழுத்தம் சீராக மாறி இதய நோய்கள் மற்றும் இரத்த குழாய் பிரச்சினைகளை சரி செய்கிறது. 

கண்பார்வை கூர்மையாகும்

பலாப்பழத்தில் உள்ள விட்டமின் ஏ கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் இவை கண்புரை, மாக்குலார் டிஜெனரேசன் மற்றும் மாலைக்கண் நோய் போன்றவை வராமல் தடுக்கிறது. 

புற்றுநோய்

இதில் சபோனின், லிக்னன்ஸ், பைப்டோ நியூட்ரியன்ஸ் மற்றும் ஜஸோப்ளோவோன்ஸ் போன்ற புற்றுநோயை எதிர்க்கும் பொருட்கள் இதில் அடங்கியுள்ளது. இந்த பொருட்கள் புற்று நோய்க்கு எதிராக செயல்பட்டு புற்று நோய் செல்களை அழிக்கிறது. இந்த பொருட்கள் கருப்பை புற்று நோய் செல்களை தடுக்கிறது.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!