சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!
- Get link
- X
- Other Apps
கிளிகள் மிகவும் அழகான பறவைகள் என்பதோடு, பேசும் திறன் பெற்றவை, மனிதர்களை காப்பியடித்து பேசுவதில் திறமையானவை. கிளிகள் மனிதர்களின் பல மொழிகளையும் கூட பேசுகின்றன.
- கிளிகள் மிகவும் அழகான பறவைகள் என்பதோடு, பேசும் திறன் பெற்றவை.
- கிளியின் பெயர் Gucci.
- கிளிகள் மனிதர்களின் பல மொழிகளையும் கூட பேசுகின்றன.
கிளிகள் மிகவும் அழகான பறவைகள் என்பதோடு, பேசும் திறன் பெற்றவை, மனிதர்களை காப்பியடித்து பேசுவதில் திறமையானவை. கிளிகள் மனிதர்களின் பல மொழிகளையும் கூட பேசுகின்றன. ஆனால் போனின் ரிங்டோனை காப்பியடிக்கும் சில கிளிகள் இருப்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். கிளியின் பெயர் Gucci. கிளி ஐபோன் (iPhone) ரிங்டோனை அப்படியே இசைப்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். துளி கூட பிசகாமல் ரிங்டோனை இசைப்பது மிகவும் ரசிக்கத்தகுந்ததாகவும் உள்ளது. இந்த செல்ல கிளியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்கும் ஒரு கிளி எவ்வளவு துல்லியமாக ரிங்டோனைப் இசைக்கிறது என மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள். இந்த வீடியோ முதலில் குச்சி கவுடா என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டது. இந்த இன்ஸ்டாகிராம் கணக்கு Vosmarie Eclectus செல்லப்பிராணிகளின் வீடியோக்கள் மற்றும் படங்களை வெளியிடுவதற்கான பிரத்யேக கணக்காகும்.
இந்த இஸ்டாகிராம் கணக்கை பூஜா தேவராஜ் மற்றும் ஹர்ஷித் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.இந்த வீடியோ திங்களன்று இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட உடனேயே மிகவும் வைரலானது.
வீடியோவை இங்கே காணலாம்:
இணையத்தில் இந்த வீடியோவை மக்கள் அதிகமானோர் விரும்புகின்றனர். ஒரு பயனர் இதில் குறிப்பிட்ட பதிலில், " இதுவரை நான் கேட்ட கிளி பேச்சில், மிகவும் ஈர்க்கக்கூடிய குரல், ஆச்சரியமாக இருக்கிறது." என பதிவிட்டுள்ளார்.
ALSO READ : ஸ்பானிஷ் திருவிழாவில் ‘தீ’ குளிக்கும் குதிரைகள்..!!
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment