நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சுவையான மசாலா ஐஸ்க்ரீம் தோசை யாருக்கு வேணும்! வைரல் வீடியோ!

 டெல்லியில் வித்தியாசமாக செய்யப்படும் மசாலா ஐஸ்க்ரீம் தோசை தயார் செய்யும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.   


  • புது வகையான ஐஸ்க்ரீம் வீடியோவை பார்த்தபின் பலருக்கும் ஐஸ்க்ரீம் சாப்பிடும் எண்ணம் வர வாய்ப்பேயில்லை.
  • ஐஸ்க்ரீம் மற்றும் மசாலா தோசை ருசி எப்படி உள்ளது என்று பல்வாறு கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


பொதுவாக இவ்வுலகில் உணவு என்பதை வெறுக்கும் நபர் என்று யாரும் இருக்கமாட்டார்கள்.  அனைவரும் இரவுபகல் பாராது ஓடி உழைப்பதெல்லாம் உணவுக்காக தான்.  அத்தகைய அத்தியாவசியமான உணவில் பல்வேறு புதுமைகள் வர தொடங்கிவிட்டன.  பெரும்பாலானோர் தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு இடங்களிலும் கிடைக்கும் புதுவகையான, பாரம்பரியமான உணவுகள் குறித்த வீடியோக்களை பதிவேற்ற தொடங்கிவிட்டனர். 

மற்ற வீடியோக்களை விட இவ்வாறு பதிவிடப்படும் பல்வேறு உணவுகள் பற்றிய வீடியோக்கள் மக்களின் வரவேற்பை எளிதில் பெற்றுவிடுகிறது.  இதற்கென்றே பலரும் வித்தியாசமான உணவுகளை தயார் செய்ய தொடங்கிவிட்டனர்.  ஐஸ்க்ரீம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும், ஆனால் இங்கு தயாரிக்கப்படும் புது வகையான ஐஸ்க்ரீம் வீடியோவை பார்த்தபின் பலருக்கும் ஐஸ்க்ரீம் சாப்பிடும் எண்ணம் வர வாய்ப்பேயில்லை. 

dosa

thegreatindianfoodie என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டெல்லி ஸ்பெஷல் மசாலா தோசை ஐஸ்க்ரீம் என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், கடைக்காரர் மசாலா தோசையை எடுத்து அதை நன்கு blend செய்கிறார்.  பின்னர் அதன்மீது ஐஸ்க்ரீமை எடுத்து வைத்து இரண்டு கலவைகளை நன்று மிக்ஸ் செய்கிறார்.  பின்னர் அவை உறைந்து ஐஸ்க்ரீம் பதத்திற்கு மாறியவுடன் அவற்றை ரோலாக எடுத்து தட்டில் வைத்து அதன் மேல் சிறிது மசாலா வைத்து அதனுடன் இரண்டு வகையான சட்னிக்களையும் வைத்து பரிமாறுகிறார். 

 

இந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது, ஐஸ்க்ரீம் மற்றும் மசாலா தோசை கலந்து உருவான இந்த கலவையை பார்த்த பலரும் இந்த ஐஸ்க்ரீமின் ருசி எப்படி உள்ளது என்றும், இதை எப்படி சாப்பிடுவது என்றும் பல்வாறு கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


also read : சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!