நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எவ்வித உடல் உபாதைகளும் ஏற்படாமல் நிம்மதியாக வாழ சாப்பிட வேண்டிய உணவுகள்

எந்தவொரு உடல்நலக்கோளாறுகள் மற்றும் நோய்கள் ஏற்படாமல் இருக்க சரியான உணவுமுறையை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

ண்ணெய் வகைகளில் தயாரிக்கப்படும் தோசை, பூரி, புரோட்டா போன்றவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.

அதாவது, குறிப்பிட்ட வயதுக்கு மேல்எண்ணெய் வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது என்கிறது மருத்துவ ஆய்வுக்குழு. உணவில் அடங்கியுள்ள சத்துக்களின் அளவை வைத்து மாவுப் பொருட்கள், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், நீர், தாது உப்புகள் என உணவை 6 வகைகளாக பிரிக்கலாம்.

அரிசி, கோதுமை, சர்க்கரை, உருளைக்கிழங்கு ஆகியவை உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்தியை தரும். எண்ணெய், வெண்ணெய், நெய் ஆகியவை கொழுப்பு சக்தியை தரும்.

முட்டை, பால், சோயா பீன்ஸ், பருப்பு வகைகள், மீன், இறைச்சி ஆகியவை புரத சக்தியை தரும். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் ஆகியவை நோயில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் நீர்சத்து அதிகம் தேவை. ஆகவே, தினமும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இன்றைக்கு துரித உணவுகள்( பாஸ்ட் புட்) உலகை ஆட்கொண்டு வருகின்றன. இதுபோன்ற சத்துகளற்ற உணவுகளுக்கு பெரும்பாலானோர் அடிமைகளாக மாறி உடலை கெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான உணவுகளை உட்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. ரசாயனங்கள் சேர்க்காத கைக்குத்தல் அரிசி, கம்பு, சோளம், அவல், முளைகட்டிய பயிர்கள், காய்கறிகள், பழங்கள் போன்ற இயற்கை உணவுகளை உண்ணவேண்டும்.

நம் உடலை நோய்களின்றி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இயற்கை உணவுகளை உட்கொள்வதே சிறந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!