நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வெளிநாட்டில் வசிக்கும் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பழம் என்ன தெரியுமா? கொட்டி கிடக்கும் நன்மைகள்

கொடைக்கானலில், அதிக அளவு காய்க்க கூடிய அவக்கோடா பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் வெளிநாட்டினர் இந்த பழத்தை போட்டி போட்டு வாங்கி உண்கின்றனர்.

ற்போது கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் நாம் நம்மை பாதுகாத்து கொள்ள செய்ய வேண்டியது நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான உணவினை எடுத்து கொள்வது தான்.

அந்த வகையில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்க கூடிய பழங்களில் ஒன்று அவக்கோடா. மேலும் இந்த பழத்தில் உள்ள நன்மைகள் குறித்து பார்க்கலாம்..

இந்த பழத்தில் நல்ல கொழுப்பு சத்து உள்ளது. இதுமட்டுமின்றி அவக்கோடா பழத்தை சாப்பிடுவதால் சருமத்திற்கும் நன்மை தருகிறது. தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் வெளிநாடுகளில் வசிப்போர் இந்த பழங்களை அதிகளவில் வாங்கி சாப்பிட ஆரம்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டினர் அவக்கோடா பழத்தில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் தினசரி ஒரு வேளை உணவாகவே இந்த பழங்களை சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதுபோல உடலில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்துகின்றது.

இந்த பழம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைகளை விரட்ட உதவுகின்றது. இதனால் நமக்கு உடல்நலம் மற்றும் உடற்பருமன் ஏற்படுவதை தடுக்கின்றது. இதில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்த பிரச்னையில் உடனடி நிவாரணம் பெறலாம். 



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!