நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாமா? ஆயுர்வேதம் என்ன கூறுகிறது?

காலையில் எழுவது கடினமாக இருந்தால் அல்லது இரவில் சீக்கிரம் தூங்க சிரமப்பட்டால் – மாலை நேர உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு ஏற்றது அல்ல.
லர், தங்களின் பரபரப்பான காலை நேரம் காரணமாக, மாலை அல்லது இரவில் உடற்பயிற்சி செய்ய விரும்புகிறார்கள்.

ஆனால் உடற்பயிற்சி செய்வதற்கு’ மாலை ஏற்ற நேரமா?

 ஆயுர்வேதத்தின் படி, இது அனைவருக்கும் பொருந்தாது என்று மருத்துவர் வரலக்ஷ்மி யனமந்த்ரா கூறினார்.

ஆயுர்வேதம் மாலை நேரத்தை ஓய்வெடுக்கும் நேரமாக கருதுகிறது. மாலை நேர உடற்பயிற்சிகள் சிறந்தவை அல்ல என்று நிபுணர் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறினார்.
உங்களுக்கு காலையில் எழுவது கடினமாக இருந்தால் அல்லது இரவில் சீக்கிரம் தூங்க சிரமப்பட்டால் – மாலையில் உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு ஏற்றது அல்ல,” என்று அவர் கூறினார்.

ஏன்?

எந்தவொரு இயக்கமும் வாதத்தை தூண்டுகிறது. அதிலும் உடற்பயிற்சி குறிப்பாக வாதத்தைத் தூண்டும் செயலாகும். அவ்வாறு செய்வது ஒருவரின் தோஷத்தைத் தொந்தரவு செய்யும்.

இரவு, இயற்கையாகவே வாதம் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நேரம். எனவே மாலையில் உடற்பயிற்சி செய்வது வாதத்தை அதிகரிக்கும் மற்றும் தூக்க சுழற்சியை சீர்குலைக்கும்.

ஒருவர் மாலையில் மட்டுமே வேலை செய்ய முடியுமா?

மாலையில் எந்த கடினமான வேலையிலும், உடற்பயிற்சியிலும் ஈடுபடாமல் இருப்பது சிறந்தது. ஒருவேளை நீங்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய விரும்பினால், சில குறிப்புகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று வரலட்சுமி கூறினார்.

* உடற்பயிற்சிக்கு முன்,உங்கள் உடலில் சூடான எண்ணெயை தடவவும்

* மிதமான உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்கவும்.

* உடற்பயிற்சிக்கு பிறகு ஒரு சூடான மூலிகை தேநீர் பருகவும்.

* உங்கள் தூக்கத்திற்கும், உடற்பயிற்சிக்கும் இடையில் குறைந்தது இரண்டு மணிநேர இடைவெளியை விட்டு விடுங்கள்

* உங்கள் தூக்கம் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டால் மாலை உடற்பயிற்சியில் ஈடுபடுவதை நிறுத்துங்கள்.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!