நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எச்சரிக்கை… பெண்களே உள்ளாடை விஷயத்தில் இந்த பிழையை செய்யாதீர்கள்

 பல பெண்கள் உள்ளாடைகளில் போதிய அக்கறை செலுத்துவதில்லை.

பெண்களின் மார்பகங்களை பராமரிக்க உதவும் பிராவை தேர்ந்தெடுப்பதில் பலருக்கு விழிப்புணர்வு குறைவாக உள்ளது.

தவறான அளவுள்ள பிரா அணிவதால் தோள்பட்டை, மார்பு, கழுத்து, முதுகெலும்பு போன்றவற்றில் வலி ஏற்படுவதாக சமீபத்திய ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.


பொருத்தமான பிராவை தேர்ந்தெடுப்பதற்கான சில வழிகள்

  1. பிராவின் அண்டர்பேண்ட், விலா எலும்பை சுற்ற உறுதியாக பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
  2. தோள்பட்டை ஸ்ட்ராப் மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது. அவை உங்கள் தோள்களில் அழுத்தத்திற்கான அடையாளத்தை பதிக்கக்கூடாது.
  3. மார்பகங்களை தாங்குவதில் 80 சதவீத ஆதரவு அண்டர்பேண்டிலிருந்து வர வேண்டும். 
  4. பிரா ஸ்ட்ராப்கள் மிகவும் இறுக்கமாக இருந்தால் தோள்பட்டை, முதுகெலும்பு போன்றவற்றில் வலியை ஏற்படுத்தக்கூடும்.
  5. மார்பகங்கள், பிராவில் இரண்டு பக்கங்களிலும் முழுவதுமாக பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். கப் அளவு மிகவும் இறுக்கமாக இருந்தால் மார்பக தசைகள் பக்கவாட்டில் வெளிப்படக்கூடும்.
  6. உட்காரும் போதும், நடக்கும்போதும், நிற்கும் போதும், சரியான தோரணையை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள தசைகள் மற்றும் தசைநார்கள் மீது ஏற்படும் அழுத்தத்தை குறைக்கலாம்.
  7. அணியும் ஆடைகளுக்கேற்ற வகையில் பிராவை தேர்வு செய்வது முக்கியமானது. புடவை, சுடிதார், வெஸ்டர்ன் ஆடைகள், டீ-ஷர்ட் என ஆடைகளுக்கு தகுத்த பிராக்கள் சந்தையில் கிடைக்கின்றன.
  8. பெண்களின் தேவைகளுக்கேற்ப சரியான பிராக்களை தேர்ந்தெடுப்பதும் அவசியமானது.
  9.  தளர்ந்த மார்பகங்களை உடைய பெண்களுக்கு சரியாக பொருந்தும் வகையில் அண்டர் ஒயர் பிராக்கள் அமையும். இதன் மூலம் மார்பகங்கள் மேலும் தளராமல் பார்த்துக்கொள்ளலாம்.
  10. பாலூட்டும் பெண்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பு பிராக்கள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால் பாலூட்டும் போது சிரமமில்லாமல் கையாளலாம். 



ALSO READ : மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாமா? ஆயுர்வேதம் என்ன கூறுகிறது?

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!