நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இளநரையினால் அதிகமாக கஷ்டப்படுகிறீர்களா? இந்த ஒரு பொருள் செய்யும் அற்புதம்........

 இன்றைய இளைய தலைமுறையினர் பெரும்பாலானோர் இளம் வயதில் தலைமுடி நரைக்க தொடங்கியுள்ளதால் பெரும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

தற்கு பெரும் காரணம் என்னவெனில், உணவு முறையில் பெரும் மாற்றம், அதிக வேலைப்பளுவினால் ஏற்படும் அழுத்தம், அதிகரித்து வரும் மாசுமாடு காரணமாக இருக்கின்றது.

இவ்வாறு இளநரையில் கஷ்டப்படுபவர்களுக்கு பிளாக் டீ பெரும் தீர்வினைக் கொடுக்கின்றது.


பிளாக் டீயை எப்படி பயன்படுத்துவது?

டானிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ள பிளாக் டீ யில் இயற்கையாகவே முடி கருமையாகும்.

சுமார் 2 கப் தண்ணீருடன் 5 அல்லது 6 தேக்கரண்டி தேயிலையினை  போட்டு நன்கு கொதிக்க வைத்து, ஆறவைக்கவும்.

பின்பு முடியில் நன்கு தடவி சுமார் 30 நிமிடம் ஊறவைத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். இதனை வாரத்திற்கு 3 அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்.


பிளாக் டீ மற்றும் காபி

முடியை கருமையாக்க பிளாக் டீயோடு பிளாக் காபியையும் பயன்படுத்தலாம். இதற்கு, காபி பவுடரை 3 கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இதற்குப் பிறகு, அதில் மூன்று கருப்பு தேநீர் பைகளை போட்டு நன்கு கொதித்ததும் சிறிது நேரம் ஆறவிடவும்.

அதன் பிறகு, ஒரு பிரஷ்ஷின் உதவியுடன், இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவவும். உங்கள் தலைமுடியில் சுமார் 1 மணி நேரம் விடவும். அதன் பிறகு, உங்கள் தலைமுடியை சாதாரண நீரில் கழுவவும்.


பிளாக் டீ மற்றும் துளசி

நரை முடி பிரச்சனையை நீக்க பிளாக் டீயோடு மற்றும் துளசியை பயன்படுத்தலாம். இதற்கு 1 கப் தண்ணீரில் 5 டீஸ்பூன் டீ போடவும்.

அதன் பிறகு, 5 முதல் 6 துளசி இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

அதன் பிறகு, கலவையை உங்கள் தலைமுடியில் சிறிது நேரம் விடவும். பிறகு சாதாரண நீரில் முடியை அலசவும்.



ALSO READ : எச்சரிக்கை… பெண்களே உள்ளாடை விஷயத்தில் இந்த பிழையை செய்யாதீர்கள்

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!