நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Scotland's Suicide Bridge: நாய்களின் ‘Suicide Point'; நீடிக்கும் மர்மம்........

 நாய்கள் தற்கொலைசம்பவங்கள் அனைத்திற்கும் பின்னால் ஏதோ பேய் இருப்பதாக சிலர் நம்புகிறார்கள். இந்தப் பாலத்தில் 'White Lady' பெண் பேய் இன்னும் உலவுவதாக நம்பப்படுகிறது.


  • நாய்கள் தற்கொலை செய்து கொள்ளும் மர்ம பாலம்.
  • விலகாமல் நீடிக்கும் மர்மம்.
  • பல ஆண்டுகளாக தொடரும் தற்கொலை சம்பவங்கள்.



னிதர்களில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பதை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பொதுவாக, மன அழுத்தம், காதல் தோல்வி அல்லது நிதி பிரச்சனை இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. ஆனால் விலங்குகள், குறிப்பாக செல்லப்பிராணிகள் தற்கொலை செய்து கொள்வது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா...

ஏனெனில் விலங்குகள் விஷயத்தில், தற்கொலை செய்து கொள்வது என்பது அனைவருக்கும் நம்ப முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்  என்பது தான் உண்மை நிலை. ஆனால் விலங்குகள் கூட தற்கொலை செய்து கொள்ளும் என்பதை  பாலத்தில் இருந்து குதித்து தனதி உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்காட்லாந்தின் தற்கொலைப் பாலம்

 ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு பாலத்தில், நாய்கள் தற்கொலை செய்து கொள்கின்றன. பாலத்திற்கு வரும் நாய்கள், இங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கின்றன என்று கூறப்படுகிறது. ஸ்காட்லாந்தில் ஒரு பாலம் உள்ளது, அதில் இருந்து பல நாய்கள் குதித்து தற்கொலை செய்து கொள்கின்றன. இந்த பாலத்தின் உயரம் சுமார் 50 அடி என்று கூறப்படுகிறது. இந்த பாலத்தில் இருந்து இதுவரை நூற்றுக்கணக்கான நாய்கள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளன; அதில் 50 நாய்கள் உயிரிழந்துள்ளன.

விலகாமல் தொடரும் மர்மம்

இந்த இடத்திற்கு வந்த பிறகு நாய்கள் தாங்களாகவே குதிப்பதற்கான காரணம் என்ன என்பது இதுவரை புரியாத புதிராகவே நீடிக்கிறது என நியூயார்க் டைம்ஸ் செய்து வெளியிட்டுள்ளது. இந்த பாலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்க துவங்கியதும், பாலத்தில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.


பேய் உலவுவதாக நம்பிக்கை

அதே சமயம் இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் பின்னால் ஏதோ பேய் இருப்பதாக சிலர் நம்புகிறார்கள். இன்றும் இந்த பாலத்தில் 'White Lady' என்ற பெண்ணின் பேய் உலவுவதாக நம்பப்படுகிறது. பேராசிரியர் பால் ஓவன்ஸ், இது குறித்து ஆராய்ந்த பிறகு, தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார். ஒருமுறை பாலத்தின் மீது நின்று கீழே பார்த்தபோது, ​​யாரோ பின்னாலிருந்து தொட்டதை உணர்ந்ததாக சொன்னார்.

தற்கொலை பாலம்

இன்றும் இந்த பாலம் மக்கள் முன் புரியாத புதிராக நிற்கிறது. அதே சமயம் நாய்கள் தற்கொலை செய்து கொண்டதில் உள்ள மர்மம் இன்று வரை மர்மம் விலகவில்லை.


ALSO READ : சமூக ஊடகங்களில் வைரலாகும் மரண கிணறு சவால் வீடியோ...........

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!